நாளை முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை வைகோ தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்


நாளை முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை வைகோ தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 16 March 2021 9:50 PM GMT (Updated: 16 March 2021 9:50 PM GMT)

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, 18-ந் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு சென்னை கொளத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு வில்லிவாக்கத்திலும், இரவு 8.30 மணிக்கு துறைமுகத்திலும் பிரசாரம் செய்கிறார்.

பின்னர், 19-ந் தேதி மதுராந்தகத்திலும், 20-ந் தேதி அரியலூரிலும், 21-ந் தேதி பல்லடத்திலும், 22-ந் தேதி மதுரை தெற்கிலும், 23-ந் தேதி சாத்தூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். 24-ந் தேதி வாசுதேவநல்லூர், 25-ந் தேதி, கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரத்திலும், 26-ந் தேதி சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசியிலும், 27-ந் தேதி, நெல்லை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து, 28-ந் தேதி சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழியிலும், 29-ந் தேதி தேனி மாவட்டத்திலும், 30-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திலும், 31-ந் தேதி மதுரை தெற்கு, வடக்கு, மேற்கிலும், ஏப்ரல் 1-ந் தேதி அரியலூரிலும், 2-ந் தேதி வாசுதேவநல்லூரிலும், 3-ந் தேதி சாத்தூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story