கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் வேட்புமனு தாக்கல்


கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 16 March 2021 11:06 PM GMT (Updated: 16 March 2021 11:06 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாகர்கோவில், 

தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. அதோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க.-காங்கிரஸ் தேசிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பா.ஜ.க. சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்தும் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

வேட்பு மனு தாக்கல்

இந்தநிலையில் பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்திடம் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக அவர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டார். அவருடன் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஊர்வலமாக வந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் நிர்வாகிகள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து பொன்.ராதாகிரு‌‌ஷ்ணனுடன், பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

Next Story