தமிழக சட்டமன்ற தேர்தல்:பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது


தமிழக சட்டமன்ற தேர்தல்:பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
x
தினத்தந்தி 17 March 2021 7:15 AM GMT (Updated: 17 March 2021 7:15 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

சென்னை

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் இன்று எஞ்சிய 3 தொகுதிகளின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகையில் போஜராஜன், விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலன் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் (தனி) -எல்.முருகன்
கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
அரவக்குறிச்சி - அண்ணாமலை
காரைக்குடி - எச்.ராஜா
நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி
திட்டக்குடி - டி. பெரியசாமி
சென்னை ஆயிரம் விளக்கு - குஷ்பு
மதுரை வடக்கு - டாக்டர் சரவணன்
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி
திருக்கோவிலூர் - கலிவரதன்
திருவண்ணாமலை - தணிகை வேல்
குளச்சல் - பி.ரமேஷ்
ராமநாதபுரம் - டி.குப்புராமு
திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்
துறைமுகம் - வினோத் பி.செல்வம்
விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன்
தளி - நாகேஷ் குமார்
உதகை - போஜராஜன்
விளவங்கோடு - ஜெயசீலன்

Next Story