தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கி.வீரமணி இன்று முதல் தேர்தல் பிரசாரம்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை,
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது பிரசார சுற்றுப்பயணம் விவரம் வருமாறு:-
18-ந் தேதி (இன்று) மாலை 5.30 மணிக்கு நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதயில் வேட்பாளர் எஸ்.ஜோதிராமனை ஆதரித்தும், மாலை 6.30 மணிக்கு திருவாரூர் தொகுதியில் வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்தும், இரவு 7.30 மணிக்கு மன்னார்குடி தொகுதிக்கு உட்பட்ட நீடாமங்கலம் பகுதியில் வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
19-ந் தேதி (நாளை) மாலை 5.30 மணிக்கு பேராவூரணியில் வேட்பாளர் என்.அசோக்குமாரை ஆதரித்தும், மாலை 6.30 மணிக்கு பட்டுக்கோட்டையில் வேட்பாளர் கா.அண்ணாதுரையை ஆதரித்தும், இரவு 7.30 மணிக்கு ஒரத்தநாடு பகுதியில் வேட்பாளர் எம்.ராமச்சந்திரனை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருக்காட்டுப்பள்ளியில் வேட்பாளர் துரைசந்திரசேகரனை ஆதரித்தும், மாலை 6.30 மணிக்கு அரியலூரில் வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்தும், இரவு 7.30 மணிக்கு செந்துறையில் வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
22-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு லால்குடி தொகுதியில் வேட்பாளர் அ.சவுந்தரபாண்டியனை ஆதரித்தும், மாலை 6.30 மணிக்கு மண்ணச்சநல்லூர் தொகுதியில் வேட்பாளர் சீ.கதிரவனை ஆதரித்தும், இரவு 7.30 மணிக்கு துரையூர் தொகுதியில் வேட்பாளர் செ.ஸ்டாலின் குமாரை ஆதரித்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story