அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் வாஷிங்மெஷின் வீடு தேடி வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ


அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் வாஷிங்மெஷின் வீடு தேடி வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 19 March 2021 2:52 AM IST (Updated: 19 March 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் வாஷிங்மெஷின் வீடு தேடி வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி அளித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலையில் சத்திரப்பட்டிக்கு திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தை தொடங்கினார். அங்கு வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

பின்னர் இடைசெவலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-

நாங்கள் சொல்வதை செய்வோம். இதுவரை சொன்ன அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தமிழகத்தில் சொன்னதை செய்யக்கூடிய கட்சி அ.தி.மு.க.தான். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின்போது நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். ஆனாலும் யாருக்கும் 2 சதுர அடி நிலம் கூட வழங்கவில்லை.

தற்போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அனைவரின் வீடு தேடி வாஷிங்மெஷின் வரும். எனவே, வீடுகளில் அதற்கான பிளக் பாய்ண்ட் அமைத்து தயாராக வைத்து கொள்ளுங்கள். மேலும் ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வீடு தேடி வந்து வழங்கப்படும்.

இதுபோன்று எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ளன. இவை அனைத்தும் நிறைவேற்றப்பட அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story