தமிழகம், புதுச்சேரியில் பிரதமர் மோடி உள்பட 30 தலைவர்கள் பிரசாரம் - பெயர் பட்டியலை வெளியிட்டது பா.ஜனதா


தமிழகம், புதுச்சேரியில் பிரதமர் மோடி உள்பட 30 தலைவர்கள் பிரசாரம் - பெயர் பட்டியலை வெளியிட்டது பா.ஜனதா
x
தினத்தந்தி 19 March 2021 6:16 AM IST (Updated: 19 March 2021 6:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள் உள்பட 30 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பா.ஜனதா சார்பில் 5 மாநிலங்களுக்கும் தலைவர்களின் சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழக சட்டசபை தேர்தல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தலைவர்களின் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்கான பட்டியல்:-

பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிரிதி இரானி, கிஷன் ரெட்டி, வி.கே.சிங், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, புரந்தேஸ்வரி, சுதாகர் ரெட்டி, தேஜஸ்வி சூர்யா, இல.கணேசன், வி.பி.துரைசாமி, கே.டி.ராகவன், சசிகலா புஷ்பா, நடிகைகள் கவுதமி, விஜயசாந்தி, நடிகர்கள் ராதாரவி, செந்தில், பேராசிரியர்கள் கனகசபாபதி, ராமசீனிவாசன், கே.பி.ராமலிங்கம், காயத்ரிதேவி, ராம்குமார் கணேசன், வேலூர் இப்ராகிம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

புதுச்சேரி மாநிலம்

இதேபோல் புதுச்சேரி மாநில பிரசார பட்டியலிலும் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, ஸ்மிரிதி இரானி, யோகி ஆதித்யநாத், சிவராஜ்சிங் சவுகான், இல.கணேசன், நடிகைகள் கவுதமி, விஜயசாந்தி, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

இவர்களோடு பா.ஜனதா அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், அர்ஜுன்ராம் மெக்வால், ராஜீவ் சந்திரசேகர், நிர்மல்குமார் சுரானா, வி.சாமிநாதன், நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், எம்பலம் செல்வம், செல்வகணபதி, தங்கவிக்ரமன், கண்ணன், ஜெயலட்சுமி, ஸ்ரீகாந்த் கருணேஷ், மோகன்குமார், அருள்முருகன், சோமவீரராஜூ என 30 பேர் இடம்பெற்று உள்ளனர்.
1 More update

Next Story