மொட்டையடித்து காங்கிரசுக்கு எதிராக சவால் விடும் மகளிர் காங்கிரஸ் தலைவர்
கேரள தேர்தல் சீட் மறுக்கப்பட்டதால் மொட்டையடித்து காங்கிரசுக்கு எதிராக சவால் விடும் மகளிர் காங்கிரஸ் தலைவர்
திருவனந்தபுரம்
காங்கிரஸ் கட்சியில் மகளிர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த லத்திகா சுபாஷ் எட்டுமனூர் தொகுதியில் கேட்டு இருந்தார். ஆனால் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அவரது பெயர் இல்லை. சீட் மறுக்கப்பட்டதால் கோபம் அடைந்த அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் முன் தனது தலையை மொட்டையடித்து கொண்டார். எட்டமனூர் தொகுதியில் சுயேட்சையாக வும் களம் இறங்கி உள்ளார்.
கேரளாவில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் எந்தவொரு தலைவரும் தேர்தலில் சீட் கிடைக்காததற்காக கட்சித் தலைமைக்கு எதிராக இது போன்று தங்கள் போராட்டத்தை பதிவு செய்தது இல்லை. இதுவே முதல் முறையாக இருக்கலாம்.
எட்டமனூரில் லத்திகா சுபாஷ், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டால் அவரின் செல்வாக்கிற்கும், மக்கள் அவர் மீதான மரியாதைக்கும் நிச்சயம் அவரால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். ஆனால், தற்போது லத்திகாவுக்கு காங்கிரஸ் கட்சி சீட் மறுத்துவிட்டதால், சுயேச்சையாகக் களமிறங்கும் லத்திகாவால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு சந்தேகத்துக்குள்ளாகி இருக்கிறது . தன்னை வளர்த்துவிட்ட கட்சிக்கு எதிராகவே சவால்விட்டுத் தேர்தலில் குதித்துள்ள லத்திகாவின் போராட்டமும், பிரச்சாரமும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Related Tags :
Next Story