கேரளத்தில் இதுவரை ஒரு பெண் முதல்வர் ஏன் சாத்தியமில்லை ... அமைச்சர் சைலாஜா டீச்சர் என்ன சொல்கிறார்.
கேரளத்தில் இதுவரை ஒரு பெண் முதல்வர் ஏன் சாத்தியமில்லாமல் இருந்து வருகிறதுஎப்போதும் பெண்களின் குறைந்த பிரதிநிதித்துவத்தை பதிவு செய்துள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும்.
திருவனந்தபுரம்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திருவாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, 140 தொகுதிகளுடன் கேரளா என்ற புதிய மாநிலம் உருவானது. 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பேரவைத் தேர்தலில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் ஆட்சி அமைத்தது.
இதுவரை 14 முறை கேரள சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சியமைத்து வருகின்றன. கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று, பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்றார். தற்போதைய தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பிரதானமாக களத்தில் உள்ளன.
இடதுசாரி ஜனநாயக முன்னணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக்தந்திரிக் ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்தியன் நேஷனல் லீக், கேரளா காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரளா காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரு பிரதான கூட்டணிகள் தவிர, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளது.
மனித அபிவிருத்தி குறியீட்டில் கேரளா தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டாலும், அரசியலில் பெண்கள் குறைவான பிரதிநிதித்துவமே உள்ளது அதில் இன்னும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மூன்று முக்கிய அணிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்களில் 40 பெண்கள் மட்டுமே இடம்பிடித்து உள்ளனர், மொத்த 420 வேட்பாளர்களில் இது 9 சதவீதம் மட்டுமே .முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது எந்தவிதமான நம்பிக்கைக்குரிய மாற்றங்களும் ஏற்படவில்லை.
மக்களவையில் கேரளாவில் வெறும் 12 பெண் எம்.பி.க்கள் மட்டுமே இருந்து உள்ளனர், எப்போதும் பெண்களின் குறைந்த பிரதிநிதித்துவத்தை பதிவு செய்துள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும்.
கேரள சட்டமன்றத்தில் இதுவரை மொத்தம் எட்டு பெண் அமைச்சர்கள மட்டுமே இடம் பெற்று உள்ளனர். கே.ஆர். கவுரி அம்மா, எம்.கமலம், எம்.டி. பத்மா, சுசீலா கோபாலன், பி.கே. ஸ்ரீமதி, பி.கே. ஜெயலட்சுமி, கே.கே. சைலாஜா மற்றும் ஜே. மெர்சிகுட்டி அம்மா.
கவுரி அம்மா , சுசீலா கோபாலன் போன்ற முக்கிய தலைவர்களும் நியாயமற்ற முறையில் முதலமைச்சர் பதவியை மறுத்துவிட்டனர், ஏனெனில் ஒரு பெண் அமைச்சரவைக்கு தலைமை தாங்குவதை கேரள அரசு இன்னும் பார்க்கவில்லை.
தமிழகம் போலவே கேரளாவில் பெண் அரசியல் தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆர்.கவுரி அம்மா, அக்காமா செரியன், கே.ஓ. ஆயிஷா பாய், சுஷீலா கோபாலன் மற்றும் கே.கே. சைலாஜா என அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பெண் அரசியல் தலைவர்கள் ஏராளம். இவர்கள் தங்கள் கட்சிகளிலும், அமைச்சரவையிலும் முக்கியமான பதவிகளை வகித்துள்ளனர். இத்தனை பெண் அரசியல் தலைவர்கள் இருந்தாலும், அம்மாநில பெண்கள் மத்தியில் இருக்கும் ஒரு குறை... ஒரு பெண் முதல்வரை இதுவரை கேரளம் பார்த்ததில்லை என்பதே.
கேரளத்தில் இதுவரை ஒரு பெண் முதல்வர் ஏன் சாத்தியமில்லாமல் இருந்து வருகிறது என்கிற கேள்விக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலாஜா, 'தி நியூஸ் மினிட்'-டுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு பெண் முதல்வர் பதவியை வகிக்க வேண்டியது அவசியம் என்றில்லை என்பது எனது உணர்வு. ஒரு பெண் முதல்வரானால் பெண்கள் விடுதலை அல்லது சுதந்திரம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று நாங்கள் கூற முடியாது. அது சாத்தியமுமில்லை.
கேரளாவில் ஆயிரக்கணக்கான பெண் தலைவர்கள் உள்ளனர். உள்ளூர் மட்டத்தில் மட்டும் பல பெண்கள் தங்கள் பலத்தைக் காட்டியுள்ளனர். ஒரு பெண் தனக்கு வாய்ப்பு கிடைத்த இடமெல்லாம் தன் வலிமையையும் வீரியத்தையும் காட்ட வேண்டும். நான் ஒரு பெண் என்பதால் சாதனைகள் நடந்ததாக நான் கூறவில்லை. எனது ஆண் சகாக்களைப் போன்ற கடமைகளையும் பொறுப்புகளையும் நான் நிறைவேற்றினேன்.
ஒரு பெண் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தாலும், அவர் தனது நிலையை எவ்வாறு பயன்படுத்துகிறாள், அவரது முடிவெடுக்கும் சக்தி மற்றும் ஒரு நெருக்கடியின்போது அவர் எவ்வாறு கையாளுகிறார் என்பதெல்லாம் பெண்கள், ஆண்களுக்கு சமமான திறன் கொண்டவர்கள் என்பதைக் காட்டுவதற்கான காலம். ஓர் ஆணால் முதல்வராக இருக்க முடியும் என்றால், ஒரு பெண் ஏன் அடுத்த முதல்வராக இருக்க முடியாது? ஆனால் இது மட்டுமே பெண்ணியம் மற்றும் பெண்களின் இடஒதுக்கீட்டின் சாராம்சம் அல்ல. முதல்வர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமாக பார்க்கக்கூடாது.
மேலும், ஒருவர் மட்டுமே முதல்வராக முடியும். ஒரு குழுவில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருக்கும் அல்லது மற்றவர்களை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு சூழ்நிலை இருந்தால், அவர் முதல்வராக பதவி வகிப்பார். கேரளாவில், தற்போது எங்களுக்கு பினராயி விஜயன் இருக்கிறார். எனவே, ஒரு பெண் முதல்வரின் கேள்வி பொருந்தாது. தொற்றுநோய் காலங்கள் மற்றும் பிற சவால்களுக்கு மத்தியில் அவர் அரசை வழிநடத்தினார். அவர் தைரியமாக முடிவெடுக்கும் சக்தி கொண்டவர் மற்றும் கேரள மக்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டவர்" என்று கூறினார்.
Related Tags :
Next Story