தமிழக சட்டமன்ற தேர்தல் விவசாயிக்கும், முதலாளிக்கும் நடக்கும் போர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


தமிழக சட்டமன்ற தேர்தல் விவசாயிக்கும், முதலாளிக்கும் நடக்கும் போர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x

தமிழக சட்டமன்ற தேர்தல் விவசாயிக்கும், முதலாளிக்கும் நடக்கும் போர் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.கந்தனை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இங்கு அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் ஒரு விவசாயி எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். ஒருவர் எப்படியாவது முதல்-அமைச்சராக வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் விவசாயி எடப்பாடி பழனிசாமி. ஒரு பக்கம் முதலாளி ஸ்டாலின். தமிழக சட்டமன்ற தேர்தல் விவசாயிக்கும் முதலாளிக்கும் இடையே நடக்கின்ற போர். கடந்த 10 ஆண்டு காலம் அமைதியாக ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க. என்றாலே அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிதனம்.

நிர்வாக திறமை வேண்டும்

அரசு பள்ளியில் படித்த 500 பேர் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருவத்துவத்தில் சேர்ந்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சராக நிர்வாக திறமை இருக்க வேண்டும். தி.மு.க.வை நிர்வாகம் செய்ய பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்துள்ளனர். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை நான் பாராட்டுகிறேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடி இட ஒதுக்கீடு பெற்றுள்ளோம். இதனால் 21 உயிர்களை தியாகம் செய்துள்ளோம். பின்தங்கிய நிலையில் உள்ள மற்றவர்களும் இதேபோன்று தனித்தனியாக இடஒதுக்கீடு கிடைக்க போராட வேண்டும். நாங்களும் அவர்களுக்காக குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story