நடிகர் கார்த்திக் நாளை முதல் 10 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்


நடிகர் கார்த்திக் நாளை முதல் 10 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
x
தினத்தந்தி 23 March 2021 10:01 PM GMT (Updated: 23 March 2021 10:01 PM GMT)

நடிகர் கார்த்திக் நாளை முதல் 10 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

சென்னை, 

நமது மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கார்த்திக், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, நாளை முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை 10 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்கிறார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நமது மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் கார்த்திக் 25-ந்தேதி (நாளை) சங்கரன்கோவில், 26-ந்தேதி ராஜபாளையம், 27-ந்தேதி போடிநாயக்கனூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 28-ந்தேதி, 29-ந்தேதிகளில் மதுரை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலும், 30-ந்தேதி கோவில்பட்டி தொகுதியிலும், 31-ந்தேதி மீண்டும் மதுரை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலும், ஏப்ரல் 1-ந்தேதி திருப்பரங்குன்றம், 3-ந்தேதி எடப்பாடி, 4-ந்தேதி ராயபுரம் தொகுதியிலும் கார்த்திக் பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story