அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்: நடத்தை விதிகளுக்கு உள்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்: நடத்தை விதிகளுக்கு உள்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆய்வு செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் அறிக்கைகள் மீது காலதாமதமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எனவே, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை ஆராய்ந்து உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், ‘அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என்பதை தேர்தலுக்குப் பின் பரிசீலிக்க வேண்டும். அதாவது, தேர்தல் முடிவுகள் வெளியான பின், 2 மாதங்களில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story