கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம்


கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம்
x
தினத்தந்தி 24 March 2021 10:01 PM IST (Updated: 24 March 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து விஜயகாந்த் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.

உடல்நலக்குறைவால் பிரசாரம் மற்றும் பொதுக்கூடங்களை தவிர்த்த விஜயகாந்த், இன்று முதல் தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக உருவெடுத்திருந்தார். எனவே அவருக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் அவர் போட்ட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 40.49% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்தது 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, ரிஷிவாந்தியம் தொகுதியில் களமிறங்கிய விஜயகாந்த், 53.19% வாக்குகளை பெற்று மீண்டும் சட்டமன்றதிற்கு தேர்வானார்.

உடல்நலக்குறைவால் இந்த முறை அவர் போட்டியிட வில்லை   விருத்தாச்சலம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

Next Story