பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து யாதவ மகா சபை ஆர்ப்பாட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களில் யாதவர்கள் இடம்பெறாததை கண்டித்து அகில இந்திய யாதவ மகாசபை அறக்கட்டளை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களில் யாதவர்கள் இடம்பெறாததை கண்டித்து அகில இந்திய யாதவ மகாசபை அறக்கட்டளை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.நீலமுரளி, பொருளாளர் வி.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து அறக்கட்டளை தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர்களில் ஒருவர்கூட யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் கிடையாது. எனவே சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு யாதவ சமுதாயத்தினர் ஆதரவு தரமாட்டார்கள். அதேவேளை தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் யாதவ சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. இனிவரும் காலங்களில் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத பட்சத்தில், யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story