"எந்த நேரத்திலும் ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்" - முதலமைச்சர் பழனிசாமி


எந்த நேரத்திலும் ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 26 March 2021 6:26 AM GMT (Updated: 2021-03-26T11:56:07+05:30)

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார்.

சிவகங்கை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில்,சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். இந்தியாவிலேயே சாதி, மத மோதலின்றி தமிழ்நாடுதான் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று கூறினார்.

Next Story