பா.ஜ.க. தொண்டர்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரித்த மத்திய மந்திரி


பா.ஜ.க. தொண்டர்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரித்த மத்திய மந்திரி
x
தினத்தந்தி 27 March 2021 4:12 PM IST (Updated: 27 March 2021 4:12 PM IST)
t-max-icont-min-icon

கோவை தெற்கு தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பா.ஜ.க. தொண்டர்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் 
கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.  இதே தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார்.

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று இருசக்கர வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.  பின்னர் பா.ஜ.க. தொண்டர்களுடன் சேர்ந்து கோலாட்டம் என்ற பாரம்பரிய நடனம் ஆடினார்.

இதன்பின்பு அவர் பேசும்பொழுது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க வேண்டும்.  கொள்கைகள், தீர்வுகள் மற்றும் மக்களின் பிரச்னைகள் பற்றி விவாதித்தால்தான் யாருக்கு ஆட்சி திறன் உள்ளது என்று தெரிய வரும் என கூறினார்.

Next Story