பல்லாவரம் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பு


பல்லாவரம் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 28 March 2021 9:15 AM GMT (Updated: 28 March 2021 9:15 AM GMT)

பல்லாவரம் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களிடம் வாக்கு சேகரித்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். கடந்த 12 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவர், வாக்காளர்களை கவர பல்வேறு நூதன முறைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று காலை பொழிச்சலூரில் கிரிக்கெட் விளையாடி, ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்களிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட ராஜேந்திரன், அதிமுக மேற்கொண்ட இளைஞர் நலன் சார்ந்த திட்டங்களை எடுத்துக் கூறினார். 

Next Story