அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்குசேகரிப்பு
சென்னை, ராயபுரம் கல்மண்டபம் சாலையில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
சென்னை,
தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் (ஏப்ரல்) 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னை, ராயபுரம் கல்மண்டபம் சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்தும் திரு.வி.க. நகர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் கல்யாணியை ஆதரித்தும் முதலமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
Related Tags :
Next Story