இலவசமாக 6 கேஸ் சிலிண்டர் தருவோம் ; பிரியாணி செய்து சாப்பிடுங்கள் பிரசாரத்தில் நடிகை நமீதா பேச்சு


இலவசமாக 6 கேஸ் சிலிண்டர் தருவோம் ; பிரியாணி செய்து சாப்பிடுங்கள் பிரசாரத்தில் நடிகை நமீதா பேச்சு
x
தினத்தந்தி 29 March 2021 9:32 AM IST (Updated: 29 March 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் தருகிறோம். உங்களுக்கு சந்தோஷமா. உங்களுக்கு பிடிச்ச பிரியாணிய செஞ்சு சாப்பிடுங்கள். என்னையும் கூப்பிடுங்கள் சாப்பிட வரேன் என நடிகை நமீதா பிரசார கூட்டத்தில் பேசினார்.

மதுரை

"தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆண்டுக்கு இலவசமாக 6 கேஸ் சிலிண்டர் தருவோம், உங்களுக்கு பிடித்த பிரியாணி செய்து சாப்பிடுங்கள். சாப்பிட என்னையும் கூப்பிடுங்கள், வருகிறேன்" என மதுரையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது நடிகை நமீதா பேசினார்.

மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் பா.சரவணனை ஆதரித்து மதுரை கோமதிபுரம் 6-வது மெயின் ரோட்டில் நடிகை நமீதா பேசும் போது கூறியதாவது:-

பாஜகவுக்கு ஓட்டுப் போட்டால் எங்களுக்கு என்ன லாபம் என கேட்கிறீர்கள். சொல்கிறேன், அதற்கு என்னிடம் பதில் உள்ளது. பாஜகவுக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும்.

ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் தருகிறோம். உங்களுக்கு சந்தோஷமா. உங்களுக்கு பிடிச்ச பிரியாணிய செஞ்சு சாப்பிடுங்கள். என்னையும் கூப்பிடுங்கள் சாப்பிட வரேன். ஆனால் நான் வெஜ் பிரியாணி செஞ்சு தாருங்கள் சாப்பிடுகிறேன்.

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500 தருவோம். இடம் இல்லாதவர்களுக்கு இலவசமாக இடமும் தந்து, அதில் வீடும் கட்டித்தருவோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும். இது மட்டும் இல்ல. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக வாஷிங் மிஷின் தருகிறோம்.

நீங்கள் கையில் துணி துவைத்து கஷ்டப்பட வேண்டாம். இலவசமாக கேபிள் டிவி தருகிறோம். உங்களுக்கு பிடிச்ச நாடகங்களைப் பார்த்து சந்தோஷமாக இருங்கள். தாமரை மலர்ந்தால், தமிழ்நாடு வளரும்.

இவ்வாறு நமீதா பேசினார்.

Next Story