கொரோனா நம்மை துரத்துகிறது; உயிர் முக்கியம் - ராமதாஸ் அறிவுரை


கொரோனா நம்மை துரத்துகிறது; உயிர் முக்கியம் - ராமதாஸ் அறிவுரை
x
தினத்தந்தி 29 March 2021 7:27 AM GMT (Updated: 29 March 2021 7:29 AM GMT)

கொரோனா நம்மை துரத்துகிறது, உயிர் முக்கியம் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆற்காடு,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாமக-வின் தலைவர், நிறுவனர், இளைஞரணி தலைவர் உள்பட பலரும் தங்கள் கட்சியினருக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இளவழகனை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது பேசிய ராமதாஸ், கொரோனா நம்மை துரத்திக்கொண்டிருக்கிறது. புது உருவம் எடுத்து புது அவதாரம் எடுத்து வருகிறது என்று கூறுகின்றனர். உயிர் முக்கியம். எச்சரிக்கையாக இருங்கள். குழந்தைகள், இளைஞர்களை எல்லாம் வீட்டை விட்டு வெளியே விடாதீர்கள். வெளியே செல்லவேண்டும் என்று தேவை ஏற்பட்டால் முகக்கவசம் அணியவைத்து அனுப்புங்கள்’ என்றார்.

Next Story