சக்கர நாற்காலியில் அமர்ந்து தொண்டர்களுடன் பேரணி சென்ற மம்தா பானர்ஜி


சக்கர நாற்காலியில் அமர்ந்து தொண்டர்களுடன் பேரணி சென்ற மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 29 March 2021 2:57 PM IST (Updated: 29 March 2021 2:57 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் சக்கர நாற்காலியில் அமர்ந்து தொண்டர்களுடன் பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் ஏப்ரல் 1-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன. இதில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.

2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களமிறங்கி உள்ளார். இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் சக்கர நாற்காலியில் அமர்ந்து தொண்டர்களுடன் பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டார். தொண்டர்கள் சூழ காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் இருந்தவாறு குதிராம் மோர் பகுதியில் இருந்து தாகூர் சவுக் வரையில் பேரணியை நடத்தினார். 


Next Story