சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியில் உதயநிதிக்கு ஆதரவாக மீனவ பெண்களிடம் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியில் உதயநிதிக்கு ஆதரவாக மீனவ பெண்களிடம் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு ‘உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க, நல்லது நடக்கும்' என்று பிரசாரம்.
சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
இந்தநிலையில் அவர் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள தனது மகனான தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு ஆதரவாக அயோத்திகுப்பத்தில் நேற்று பிரசாரம் செய்தார்.
துர்கா ஸ்டாலின் மீனவ பெண்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக ‘உதயசூரியன்' சின்னத்தில் வாக்குகள் திரட்டினார். அப்போது அவரிடம் ‘மெரினாவில் எங்களுக்கு மீண்டும் கடைகள் ஒதுக்கி தர வேண்டும். முதியோர் ஓய்வூதிய தொகை முறையாக கிடைப்பது இல்லை. விதவை பென்சன் வருவது இல்லை. படித்த எங்கள் பிள்ளைகள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். இந்த பிரச்சினைகளை எல்லாம் நிவர்த்தி செய்து தர வேண்டும்.' என்று மீனவ பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு துர்கா ஸ்டாலின் அவர்களிடம், ‘உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கம்மா..., இனி எல்லாமே நல்லாவே நடக்கும்மா....' என்று கூறினார்.
துர்கா ஸ்டாலினிடம் ‘செல்பி' எடுக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
Related Tags :
Next Story