ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வழக்கமாக தேர்தல் பிரச்சாரம் இறுதி நாளில் மாலை 5 மணியுடன் பரப்புரை முடியும் நிலையில், இந்த முறை 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கி, மாலை 7 மணி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
Related Tags :
Next Story