‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி தான் காங்கிரஸ்’ - ராகுல் காந்தி


‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி தான் காங்கிரஸ்’ - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 31 March 2021 5:23 PM GMT (Updated: 31 March 2021 5:23 PM GMT)

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி தான் காங்கிரஸ் என்று ராகுல் காந்தி கூறினார்.

கவுகாத்தி, 

அசாம் மாநில சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல், கடந்த 27-ந் தேதி நடந்தது. இரண்டாவது கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. மூன்றாவது இறுதிக்கட்ட தேர்தல் 6-ந்தேதி நடக்கிறது.

மூன்றாவது கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார். நேற்று அவர் கவுகாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் நாங்கள் 5 வாக்குறுதிகளை அளித்துள்ளோம். 5 வாக்குறுதிகளையும் காங்கிரஸ் எப்படி நிறைவேற்றும் என்று கேட்கிறீர்கள். நாங்கள் பா.ஜ.க. போல அல்ல. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சிதான்  காங்கிரஸ்.

பஞ்சாப், சத்தீஷ்கார், கர்நாடகத்தில் நாங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, ஆட்சிக்கு வந்தபின்னர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலியை 365 ரூபாயாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளோம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Next Story