பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அமித்ஷா இன்று கரூரில் பிரசாரம்

பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அமித்ஷா இன்று கரூரில் பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2021 10:18 PM GMT (Updated: 2021-04-01T03:48:09+05:30)

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வேலாயுதம்பாளையம் வருகிறார்.

கரூர், 

இதற்காக அவர் பிற்பகல் 3 மணி அளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் கரூர் மாவட்டம், தளவாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி திடலில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா வந்து திறந்த வேனில் பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலையை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். மேலும் புதுச்சேரி செல்லும் அமித்‌ஷா அங்கு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்கிறார்.

Next Story