"எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலையே முக்கியமானதாக கருதுகின்றனர்" - பிரதமர் மோடி பேச்சு
எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலையே முக்கியமானதாக கருதுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேசமணி உள்ளிட்டோரை நினைவு கூர்கிறேன். வளர்ச்சி என்ற மந்திரத்தை முன் வைத்து நாங்கள் மக்களை எதிர்கொள்கிறோம்.
எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலையே முக்கியமானதாக கருதுகின்றனர். வாரிசு அரசியலால், திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர்.
கொரோனாவின் போது, வெளிநாடுகளில் சிக்கி தவித்த 5 லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த தமிழக பாதிரியாரை மீட்டோம்.
கடலோர மேம்பாட்டுக்காக 3 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண் துறையை நவீனமயமாக்கி வருகிறோம். முதலீடுகளை ஈர்த்து,உள்ளூரில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்; மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் கடனுதவியை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story