தமிழக சட்ட சபை தேர்தல்: ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்புக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம்


தமிழக சட்ட சபை தேர்தல்:  ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்புக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம்
x
தினத்தந்தி 3 April 2021 11:24 AM IST (Updated: 3 April 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரம்விளக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவு திரட்டினார்.

இன்று காலை 10 மணியளவில் ஆயிரம்விளக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக  திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டார். தேனாம்பேட்டை சிக்னலில் இருந்து திறந்த வேனில் அவர் பாண்டிபஜார் நோக்கி சாலையில் பேரணியாக சென்றார். 

சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த தொண்டர்களை பார்த்து அமித்ஷா கை அசைத்தார்.  இந்த பேரணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story