கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கவில்லை - முக ஸ்டாலின் குற்றச்சாட்டு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கவில்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாகை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தில் பேசிய முக ஸ்டாலின், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கவில்லை என்று தமிழக அரசு மற்றும் மத்திய பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டினார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இனையம் துறைமுகம் கொண்டு வருவோம் என்கிறார். இனையம் துறைமுகம் திட்டத்தை கொண்டு வரவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறுகிறார். இனையம் துறைமுகம் விவகாரத்தில் பிரதமர் மோடியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மீனவர்களை ஏமாற்றுகின்றனர்’ என்றார்.
மேலும், தனது மகள் செந்தாமரை மற்றும் திமுக நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்றுவரும் வருமானவரி சோதனை குறித்து பேசிய முக ஸ்டாலின், சோதனைக்கு வரும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு எதுவும் சிக்கவில்லை’ என்றார்.
Related Tags :
Next Story