மு.க ஸ்டாலின் தன் மகனை பற்றி மட்டுமே கவலை கொள்கிறார்: அமித்ஷா கடும் தாக்கு
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் மகனை பற்றி மட்டுமே கவலை கொள்கிறார் என அமித்ஷா கடுமையாக சாடினார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சியின் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, திமுகவை கடுமையாக சாடினார்.
அமித்ஷா கூறியதாவது:- திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் மகனை பற்றி மட்டுமே கவலை கொள்கிறார். பிரதமர் மோடி, விவசாயிகள், மீனவர்கள், மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார்.
இறந்த தலைவர்கள் குறித்து மு.க ஸ்டாலின் விமர்சிக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அநாகரீகமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இதற்காக திமுக வெட்கப்பட வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story