சட்டமன்றத் தேர்தல்: சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல 230 இணைப்பு பேருந்துகள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 April 2021 7:01 PM IST (Updated: 3 April 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல 230 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 230 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், கே,.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய சிறப்பு பேருந்து நிலையங்களிலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 230 இணைப்புப் பேருந்துகள் ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story