தேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு


தேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 4 April 2021 12:57 AM GMT (Updated: 2021-04-04T06:27:19+05:30)

தேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு.

சென்னை, 

நடிகை குஷ்பு சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தினமும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் தேர்தல் விதிமுறையை மீறி, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மசூதி அருகே பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், கோடம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குஷ்பு மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story