தேர்தல் பார்வையாளர் ஆய்வு


தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 5 April 2021 2:09 PM GMT (Updated: 2021-04-05T19:39:57+05:30)

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து, நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்த பணியை, மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் சோமாபட்டாசார்ஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர், சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பையா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story