மே. வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் 4 இவிஎம் இயந்திரங்கள்; தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்


மே. வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் 4 இவிஎம் இயந்திரங்கள்; தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 6 April 2021 8:10 AM GMT (Updated: 6 April 2021 8:12 AM GMT)

மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் 4 இவிஎம் இயந்திரங்கள் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில்  ஹவுரா மாவட்டத்தில்  துள்சிபேரியா எனும் கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டில் 4 மின்னணு வாக்கு இயந்திரங்களும், ஒரு  விவிபாட் இயந்திரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தேர்தல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ' ஹவுரா மாவட்டம், உலுபேரியா சட்டப்பேரவைக்கு உட்பட்ட துள்சிபேரியா எனும் கிராமத்தில் நேற்றுமுன்தினம் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் முன் தேர்தல் ஆணையத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் அதிகாலையில் நின்றிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். செக்டார் 17 பகுதி அதிகாரி தபான் சர்க்காருக்கு சொந்தமான வாகனம் என்பதை மக்கள் அறிந்து தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், திரிணமூல் காங்கிஸ் நிர்வாகி வீட்டிலிருந்து 4 இவிஎம் இயந்திரங்கள், ஒரு விவிபாட் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். செக்டார் 17 அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செக்டார் அதிகாரி தபான் சர்க்கார், இரவு நேரத்தில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லாததால், உறவினர் வீட்டில் தங்க முடிவு செய்தார். அதன்படி, திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் அதிகாரி தங்கினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட 4 இவிஎம் இயந்திரங்களும் 3-ம் கட்டத் தேர்தலில் பயன்படுத்தப்படவில்லை. எனக்கூறப்படுகிறது. 


Next Story