பூந்தமல்லியில் பெண்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் பெண்களுக்கென பிரத்யேகமாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், நூறு சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கத்தோடு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்காக பல்வேறு வசதிகளை செய்துள்ளது.
அந்த வகையில் சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் பெண்களுக்கென பிரத்யேகமாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, சுவர்களில் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்ட வாக்குச்சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என அனைத்து பணிகளுக்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த பெண் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியதோடு, தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story