புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவு


புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 12:30 PM GMT (Updated: 6 April 2021 12:36 PM GMT)

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏனாமில் 85.76%  வாக்குப்பதிவாகியுள்ளது. 

மாலை 6 மணிக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story