மாநில செய்திகள்

கும்பகோணம்: ஓட்டுக்கு ரூ.2,000 என டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து ஏமாற்றிய கும்பல்... + "||" + Fake Two Thousand Rupee Tocken Given to Voters by Political Party Workers in Kumbakonam

கும்பகோணம்: ஓட்டுக்கு ரூ.2,000 என டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து ஏமாற்றிய கும்பல்...

கும்பகோணம்: ஓட்டுக்கு ரூ.2,000 என டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து ஏமாற்றிய கும்பல்...
கும்பகோணத்தில் ஓட்டுக்கு ரூ.2,000 டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து கும்பல் ஒன்று ஏமாற்றியுள்ளது.
கும்பகோணம்,

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதற்கிடையில், தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், ஒருசில இடங்களில் பணத்திற்கு பதிலாக டோக்கன் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கும்பல் ஒன்று ஓட்டுக்கு 2,000 ரூபாய் என்ற டோக்கன் வழங்கிவிட்டு ஏமாற்றி சென்றுள்ளது.

நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் வாக்களிப்பதற்காக 2,000 ரூபாய் டோக்கன்களை கொடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி இன்று கும்பகோணம் பெரியகடை வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய மக்கள் மளிகை கடைக்கு இன்று சென்று டோக்கன்களை கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மளிகைகடை உரிமையாளர் இந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடுத்துக்கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2. வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.
3. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக‌வசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக‌வசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
4. அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.3.53 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை
ஊத்தங்கரையில் அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய திடீர் ஆய்வில் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
5. ‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார் - ப.சிதம்பரம் டுவீட்
‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.