மேற்கு வங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு


மேற்கு வங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு
x

மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது.  

திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களின் படி நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகரி சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

Next Story