மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை, மம்தா பின்னடைவு


மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை, மம்தா பின்னடைவு
x
தினத்தந்தி 2 May 2021 11:11 AM IST (Updated: 2 May 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது.  

திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களின் படி நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகரி சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது, 170 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 95 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி முகம் காட்டினாலும் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்து இருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story