தமிழக சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழு விவரம்


தமிழக சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள  அதிகாரபூர்வ முழு விவரம்
x
தினத்தந்தி 2 May 2021 7:55 AM GMT (Updated: 2021-05-02T13:25:25+05:30)

தமிழக சட்டசபை தேர்தல் மதியம் ஒரு மணிவரை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ முழுவிவரம்

சென்னை

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. இதில் 1 மணி வரை 232 தொகுதிகளுக்கான நிலவரம் இதுவரை தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 36.9%% வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அஇஅதிமுக 34.4% வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.

பாமக 4.53% வாக்குகள் பெற்று 3வது இடத்தையும், காங்கிரஸ் 3.90% வாக்குகள் பெற்று 4வது இடத்தையும் பிடித்துள்ளன. பாஜக 2.49% வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தையும், சிபிஐ 1.40% வாக்குகளும், சிபிஐ எம் 0.68% வாக்குகளும் பெற்றுள்ளன. தேமுதிக 0.44% வாக்குகள் பெற்றுள்ளது.

அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட சேர்ந்து 13.37 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. 

முன்னிலை நிலவரம் என்று பார்த்தால் திமுக அதிகபட்சமாக 118  தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுகவிற்கு அடுத்தபடியாக அதிமுக 80 தொகுதிகளில்  முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் , பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளிலும், பா. ஜனதா தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 3 தொகுதிகளிலும், சிபிஐ, சிபிஐ எம் தலா 2 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம்  ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

கூட்டணியாக பார்த்தால் திமுக கூட்டணி 137 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 94 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மநீம கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

Next Story