சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 25,166 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 May 2021 9:32 AM GMT (Updated: 2 May 2021 9:43 AM GMT)

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 25,166 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த முறை முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். தொடர்ந்து, விஐபி தொகுதியாக இருந்துவரும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? முதலைமைச்சர் ஆவாரா? என்று திமுகவினரிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 25,166 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்ற வாக்குகள் - 39,840

அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் பெற்ற வாக்குகள் - 14,674

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜெகதீஷ் குமார் பெற்ற வாக்குகள் - 5,390

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெமிலஸ் செல்வா பெற்ற வாக்குகள் - 4,932


Next Story