தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்கள் வாரியாக நிலவரம்


தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்கள் வாரியாக நிலவரம்
x
தினத்தந்தி 2 May 2021 10:05 AM GMT (Updated: 2 May 2021 10:05 AM GMT)

தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் முன்னிலை விவரம் வருமாறு:-

சென்னை

திருச்சி மாவட்டம்த்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுகவே முன்னிலை வகிக்கிறது.

மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் என 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலை. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி ஆகிய தொகுதிகளில் திமுகவும், அறந்தாங்கியில் காங்கிரஸும், கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியும் முன்னிலை வகிக்கிறது. மற்றும் விராலிமலையில் அதிமுக முன்னிலை. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூரில் திமுகவும், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.  

மதுரை மாவட்டத்தில் உள்ள  மேலூர், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளில் அதிமுகவும், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கின்றன 

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம் தொகுதியில் திமுக முன்னிலை. போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக முன்னிலை. 

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளில் திமுகவும், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசியில் அதிமுகவும் முன்னிலை. 

ராம்நாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதிகளில் திமுக முன்னிலை. திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை.

தூத்துக்குடி மாவட்டத்தில் வி தூத்துக்குடி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 89,130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார். ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியும், கோவில்பட்டியில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி பாஜக முன்னிலை. அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுகவும், ராதாபுரம் மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் திமுகவும் முன்னிலை.    

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதியில் திமுகவும். குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூரில் காங்கிரஸ் கட்சியும். நாகர்கோவில் தொகுதில் பாஜகவும் முன்னிலை. 

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி காங்கிரஸ் முன்னிலை, திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை திமுக. சிவகங்கை அதிமுக முன்னிலை. 

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் திமுக, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை. 

Next Story