தமிழக சட்டசபை தேர்தல்: 17-வது சுற்று முடிவில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் முன்னிலை


தமிழக சட்டசபை தேர்தல்: 17-வது சுற்று முடிவில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 3:54 PM IST (Updated: 2 May 2021 3:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் 17-வது சுற்று முடிவில் துரைமுருகன் 57 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.

வேலூர்,

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக முன்னிலையில் இருந்தன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 3 மணி நிலவரப்படி, திமுக 152 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 81 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மநீம 1 இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை வகித்து வருகிறார்.

*17-வது சுற்று முடிவில் துரைமுருகன் 57  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

*திமுக-55,324, அதிமுக-55,267 வாக்குகள் பெற்றுள்ளன.

அமமுக+ 492 மநீம+ 257 நாதக 4100 மற்றவை 741

Next Story