93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
சென்னை,
அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பழனிசாமி 93,802 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
இதில், 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக.,வின் சம்பத்குமாரை தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார். இதன்மூலம் எடப்பாடி தொகுதியில் 6 வது முறையாக போட்டியிட்ட பழனிசாமி, 5 வது முறையாக வென்றுள்ளார்.
Related Tags :
Next Story