காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி


காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 4:11 PM GMT (Updated: 2 May 2021 4:11 PM GMT)

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர்,

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு 794 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஆரம்பம் முதலே காட்பாடியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், துரைமுருகன் 52,526 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளரான ராமு 51,087 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றது அவரது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story