சட்டசபை தேர்தல் - 2021

வேலூர் அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் வெற்றி + "||" + DMK candidate AP Nandakumar wins Vellore Anaikattu constituency

வேலூர் அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் வெற்றி

வேலூர் அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் வெற்றி
திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர்,

தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 160 இடங்களிலும், அதிமுக 74 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

அனைத்து தொகுதிகளிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் மொத்தம் பதிவாகியிருந்த 1,98,393 வாக்குகளில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் 95,159 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் த.வேலழகன் 88,799 வாக்குகள் பெற்றுள்ளார்.