கொளத்தூர் தொகுதியில் வெற்றி - சான்றிதழ் பெறுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்


கொளத்தூர் தொகுதியில் வெற்றி - சான்றிதழ் பெறுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 May 2021 6:22 PM GMT (Updated: 2 May 2021 6:22 PM GMT)

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக தலைவர் ஸ்டாலின் பெற்று கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. இதனால் திமுக ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்ற கூடுதல் பொறுப்புடன் அவர் கொளத்தூர் தொகுதியில் நின்றார். கொளத்தூர் தொகுதியில் 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக தலைவர் ஸ்டாலின் பெற்று கொண்டார். இந்த சான்றிதழ் பெறுவதற்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகை தந்தார்.

Next Story