கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை


கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 2 May 2021 6:51 PM GMT (Updated: 2 May 2021 6:51 PM GMT)

கொளத்தூர் தொகுதியின் வெற்றி சான்றிதழை கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பித்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக தலைவர் ஸ்டாலின் பெற்று கொண்டார். 

வெற்றி சான்றிதழை பெற்ற பின்னர் லயோலா கல்லூரியில் இருந்து கருணாநிதி நினைவிடம் ஸ்டாலின் சென்றார். அங்கு கருணாநிதி நினைவிடத்தில் கொளத்தூர் தொகுதியின் வெற்றி சான்றிதழை சமர்ப்பித்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


Next Story