சட்டசபை தேர்தல் - 2021

வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு + "||" + ADMK MLA's Meeting Willbe Held at May 5

வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு

வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு
தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றிபெற்றது. திமுக 133 இடங்களையும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன. திமுக வெற்றியை தொடர்ந்து தனிப்பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வராக உள்ளார். 

அதேவேளை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.  அதில் அதிமுக - 65 இடங்களையும், பாமக - 5 இடங்களையும், பாஜக - 4 இடங்களையும் இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இதனால், தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

7-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 'மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்'- முக ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட உதவிட வேண்டும் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் - பிரதமர் மோடி டுவிட்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜா பின்னடைவு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.
4. தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - அமித்ஷா டுவிட்
5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
5. கொரோனா 'நெகட்டிவ்’ வேட்பாளர்கள், முகவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி
மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.