மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் விலகல்


மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் விலகல்
x
தினத்தந்தி 6 May 2021 6:58 PM IST (Updated: 6 May 2021 6:58 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் இன்று விலகியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், கமல்ஹாசன் உள்பட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியை தழுவினார்.

இதற்கிடையில், தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணம் குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் இன்று விலகியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியது குறித்து மகேந்திரன் கூறியதாவது,

மிகப்பெரிய தோல்விக்கு பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை.

கமல் இனி மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை

கமல்ஹாசன் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும்.

தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது.

அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்றார்.

Next Story