சீன துணை அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

சீன துணை அதிபர் வாங் கிஷானை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
பெய்ஜிங்,
மூன்று நாட்கள் அரசுப்பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் சீனா செல்வது இதுதான் முதல் முறையாகும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால், கோபம் அடைந்த பாகிஸ்தான் சீனாவிடம் உதவியை நாடியுள்ள சூழலில், ஜெய்சங்கரின் சீன சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சீன பயணத்தின் ஒரு பகுதியாக சீன துணை அதிபர் வாங் கிஷானை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சீன துணை அதிபரிடம், "உலக நாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகளால் ஒருவிதமான நிலையற்ற சூழல் நிலவும்போது, இந்தியா - சீனா இடையேயான உறவு பிராந்திய ஒற்றுமையை ஸ்திரப்படுத்துவதாக இருக்க வேண்டும் என நம்புகிறேன்" என வலியுறுத்திக் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story