உலக செய்திகள்

சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது - இந்தியா குற்றச்சாட்டு + "||" + India slams Pakistan at UN, says footprint of every major act of terrorism passes through this country

சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது - இந்தியா குற்றச்சாட்டு

சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது - இந்தியா குற்றச்சாட்டு
சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது என்று இந்தியா கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது.
ஜெனிவா

ஐ.நா. பொதுச்சபையில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டதிருத்த மசோதா குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா சார்பில் பேசும் போது ஐ.நாவுக்கான நிரந்தர  இந்திய தூதுக்குழுவின் முதன்மை செயலர் பவுலோமி திரிபாதி பேசும் போது, 

அரசியலமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவு ரத்து, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானின் பேச்சு, கோழிக்கூட்டுக்கு காவல் இருக்கும் நரியைப் போன்றது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக இருக்கிறது.சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது. இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் விருப்பம் - அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு விருப்பம் உள்ளது என அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.
2. சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார்: எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல்
சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பியதாக, எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு - மத்திய அரசு
டெல்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
4. ஐநாவில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி
ஐநாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது.
5. பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.